தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ படகு ஓட்டி இரு கிராமங்களை இணைக்கும் ரேகா மாருதி அம்பி

 படகு ஓட்டி இரு கிராமங்களை இணைக்கும் ரேகா மாருதி அம்பி

 படகு ஓட்டி இரு கிராமங்களை இணைக்கும் ரேகா மாருதி அம்பி


ADDED : மார் 02, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகாவின் வடமாவட்டங்களில் உள்ள கிராமங்கள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. சரியான சாலை வசதி, போதுமான பஸ் போக்குவரத்து வசதியின்றி, மக்கள் தினந்தோறும் சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

சில கிராமங்கள் ஆற்றங்கரையோரம் இருப்பதால், ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்வதற்கு படகில் தான் செல்லும் நிலை உள்ளது. பெரும்பாலும் ஆண்களே படகு ஓட்டும் நிலையில், பெண் ஒருவரும் படகு ஓட்டி அசத்துகிறார். அவரது பெயர் ரேகா மாருதி அம்பி, 42. பெலகாவியின் காக்வாட் தாலுகா மோல்வாட் கிராமத்தை சேர்ந்தவர்.

படகு ஓட்டும் அனுபவம் குறித்து ரேகா கூறியதாவது:

மோல்வாட் கிராமத்தில் இருந்து எதிர்திசையில் உள்ள ராய்பாக் தாலுகாவில் உள்ள சின்சலி கிராமத்திற்கு, கிருஷ்ணா ஆற்றை படகில் கடந்து தான் செல்ல வேண்டும். என் அப்பா படகு ஓட்டும் தொழில் செய்தார். எனக்கும் கற்றுக் கொடுத்தார்.

பத்து ஆண்டுகளாக இரு கிராமங்களையும் இணைக்கும் வகையில் படகு ஓட்டுகிறேன். நான் எப்போதும் தண்ணீரை நேசிக்கிறேன். தண்ணீரால் சூழப்பட்டே சூழ்நிலையில் வளர்ந்ததால், படகு ஓட்டி செல்வது எனக்கு பிடித்தமானது. தென்மேற்கு பருவமழைக்கு பின், கிருஷ்ணா ஆற்றில் அபாய வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆற்றில் படகு ஓட்டுவது சவாலான விஷயமாக இருக்கும்.

ஆனாலும், எந்த இடத்தில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் என்று எனக்கு தெரியும் என்பதால், நீரோட்டம் குறைவாக உள்ள பகுதியில் படகை ஓட்டி செல்வேன். ஒரு நபருக்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறேன். ஆரம்பத்தில் துடுப்பின் உதவியுடன் படகை ஓட்டினேன். தற்போது, 30 பேர் பயணிக்கும் வகையில் பெரிய மோட்டார் படகை ஓட்டுகிறேன். ஒவ்வொரு நாளும் படகில் ஆற்றை கடக்கும் போது, மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். படகு தான் என் குடும்பத்தையும் காப்பாற்றுகிறது இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us