/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'இறந்தவரிடம் ரயில் டிக்கெட் இல்லை என்பதால் நிவாரணம் மறுக்க கூடாது'
/
'இறந்தவரிடம் ரயில் டிக்கெட் இல்லை என்பதால் நிவாரணம் மறுக்க கூடாது'
'இறந்தவரிடம் ரயில் டிக்கெட் இல்லை என்பதால் நிவாரணம் மறுக்க கூடாது'
'இறந்தவரிடம் ரயில் டிக்கெட் இல்லை என்பதால் நிவாரணம் மறுக்க கூடாது'
ADDED : மே 22, 2025 11:12 PM
பெங்களூரு: 'ரயில் விபத்தில் இறந்த நபரின் பாக்கெட்டில், ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால், அவரதுகுடும்பத்தினருக்கு நிவார ணம் வழங்க மறுப்பது சரியல்ல' என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
விஜயபுராவை சேர்ந்தவர் அமினாசாப் முல்லா. இவர் 2015 ஏப்ரல் 6ம் தேதி, மஹாராஷ்டிராவின், லிம்பாலாவுக்கு செல்லும் நோக்கில் விஜயபுராரயில் நிலையத்துக்குவந்தார்.
டிக்கெட் வாங்கி கொண்டு வரும் போது, ரயில் நகர துவங்கியது. ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த போது, தவறிவிழுந்து காயமடைந்து உயிரிழந்தார்.
ரயில் விபத்தில் இறந்ததால், தங்களுக்கு நிவாரணம் வழங்கும்படி கோரி, ரயில்வே தீர்ப்பாயத்தில் அமினாசாப் முல்லாவின் மனைவியும், பிள்ளைகளும் மனு தாக்கல் செய்தனர். ஆனால், 'அமினாசாப் முல்லா, ரயில் விபத்தில் இறந்ததற்கான, எந்த ஆதாரங்களும் இல்லை. அவரது பாக்கெட்டில் ரயில் டிக்கெட் இருக்கவில்லை. எனவே நிவாரணம் வழங்க முடியாது' என, தீர்ப்பாயம் கூறியது.
இது தொடர்பாக கேள்வி எழுப்பி, அவரது குடும்பத்தினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீது நீதிபதி ஹஞ்சாடி சஞ்ஜீவ் குமார் முன்னிலையில், நேற்று விசாரணை நடந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ரயில் விபத்தில் இறந்த நபரின் பாக்கெட்டில் ரயில் டிக்கெட் இல்லை என்ற காரணத்தால், அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் மறுக்க முடியாது. விஜயபுரா மற்றும்மிஞ்சினஹாளா ரயில் நிலையங்களுக்கு இடையே, அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, எப்.ஐ.ஆரும் பதிவாகி யுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையிலும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அவர் ரயில் விபத்தில் இறந்ததை உறுதிப்படுத்துகின்றன.
அவரது உடலை கொண்டு செல்லும் போது, பாக்கெட்டில் இருந்த டிக்கெட் தொலைந்திருக்கலாம்.
அதற்காக அவரது குடும்பத்தினர் நிவாரணம் பெற தகுதியற்றவர்கள் என, தீர்ப்பாயம் கூறுவது சரியல்ல. அவரது குடும்பத்தினருக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணத்தை வட்டியுடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டார்.