sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சொகுசு பஸ்களில் கதவுகள் அகற்றம்

 சொகுசு பஸ்களில் கதவுகள் அகற்றம்

 சொகுசு பஸ்களில் கதவுகள் அகற்றம்


ADDED : ஏப் 22, 2026 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 01:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவனஹள்ளி: விபத்தின் போது பயணியர் வெளிவருவதை சிரமமாக்கும் வகையில், சொகுசு பஸ்களில் டிரைவர் சீட்டுக்கு பின்னால் வைக்கப்பட்டிருந்த எட்டு கதவுகளை, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அகற்றினர்.

கர்நாடகாவில் சமீப காலமாக, 'ஏ.சி., ஸ்லீப்பர்' சொகுசு பஸ்கள் விபத்தில் சிக்குகின்றன. விபத்துகளின் போது, சில நேரங்களில் டிரைவர் சீட்டுக்கு பின்புறம் உள்ள கதவு தானாக பூட்டும் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், அவசர காலத்தில் பஸ்சில் இருக்கும் பயணியர் வெளியே வர முடியாத சூழல் உருவாகிறது.

இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, 'ஏ.சி., ஸ்லீப்பர்' சொகுசு பஸ்களில் ஓட்டுநர் சீட்டுக்கு பின்னால் இருக்கும் கதவை அகற்ற வேண்டும் என, போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இருப்பினும், சில தனியார் பஸ்களில் கதவுகள் அப்புறப்படுத்தப்படாமல் இருந்தன.

இது குறித்து, பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி ஆர்.டி.ஓ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேவனஹள்ளி ராணி கிராசில் நேற்று காலை, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, 50க்கும் மேற்பட்ட தனியார் சொகுசு பஸ்களை சோதனையிட்டனர். இதில், எட்டு பஸ்களில் டிரைவர் சீட்டுக்கு பின்னால் இருந்த கதவுகள் அகற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us