தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போக்குவரத்து துறையில் பழைய பஸ்கள் நீக்கம்

 போக்குவரத்து துறையில் பழைய பஸ்கள் நீக்கம்

 போக்குவரத்து துறையில் பழைய பஸ்கள் நீக்கம்


ADDED : செப் 20, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 11:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக போக்குவரத்து கழகங்களில், 15 ஆண்டுகளுக்கும் முந்திய பழைய பஸ்கள் நீக்கப்படுகின்றன. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், பழைய பஸ்களை அகற்றும்படி, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 15 ஆண்டுகளை நிறைவு செய்த வாகனங்கள் நீக்கப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் 1,483 பஸ்கள், பி.எம்.டி.சி.,யின் 2,262 பஸ்கள், பழைய இரும்பு பொருட்கள் கடைக்கு அனுப்பப்பட்டன.

அதுபோல, வடமேற்கு போக்குவரத்து கழகத்தின் 820 பஸ்கள், கல்யாண கர்நாடகாவின் 882 பஸ்கள் போக்குவரத்து பணியில் இருந்து, திரும்ப பெறப்பட்டுள்ளன. நடப்பாண்டு நான்கு போக்குவரத்து கழகங்களின், 1,400 பழைய பஸ்களை நீக்க, தயாராகி வருகிறோம்.

கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் 3,624, வடமேற்கு போக்குவரத்து கழகத்தின் 2,929, கல்யாண கர்நாடகாவின் 2,360, பி.எம்.டி.சி.,யின் 605 பஸ்கள் வாபஸ் பெறப்படும். இது குறித்து, தேசிய பசுமை தீர்ப்பா யத்திடம், அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us