/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏர்போர்ட் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு; வாடகை கார் டிரைவர்கள் மீது தடியடி
/
ஏர்போர்ட் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு; வாடகை கார் டிரைவர்கள் மீது தடியடி
ஏர்போர்ட் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு; வாடகை கார் டிரைவர்கள் மீது தடியடி
ஏர்போர்ட் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு; வாடகை கார் டிரைவர்கள் மீது தடியடி
ADDED : டிச 17, 2025 06:37 AM
தேவனஹள்ளி: பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் அமல்படுத்தி உள்ள, புதிய பிக் - அப் விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாடகை கார் டிரைவர்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு விமான நிலைய வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், விமான நிலைய நிர்வாகம், வாடகை கார்களுக்கு புதிய பிக் - அப் விதிமுறைகளை அமல்படுத்தியது.
அதாவது, 'விமான நிலையத்திற்கு வரும் வாடகை கார்கள், முதல் எட்டு நிமிடம் விமான நிலைய வளாகத்திற்குள் நிற்க கட்டணம் கிடையாது.
எட்டு முதல் 13 நிமிடங்கள் வரை வாகனங்களை நிறுத்த 150 ரூபாயும்; 13 நிமிடம் முதல் 18 நிமிடம் வரை வாகனம் நிறுத்த 300 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். 18 நிமிடத்திற்கு மேல் நிற்கும் வாகனங்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்படும்' என்று அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.
புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விமான நிலையத்திற்குள் நுழையும் சதனஹள்ளி சுங்கச்சாவடியில் நேற்று வாடகை கார் டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு - பல்லாரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நீதி கேட்டு கோஷம் எழுப்பினர்.
தண்ணீர் பாட்டில்களை வீசினர். இதனால் வேறு வழியின்றி தடியடி நடத்தி கார் டிரைவர்களை போலீசார் கலைத்தனர். பலர் கைது செய்யப்பட்டு வேன்களில் ஏற்றி செல்லப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

