தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ டில்லியில் குடியரசு தின அணிவகுப்பு 'தினை முதல் சிப் வரை' ஊர்தி தேர்வு

 டில்லியில் குடியரசு தின அணிவகுப்பு 'தினை முதல் சிப் வரை' ஊர்தி தேர்வு

 டில்லியில் குடியரசு தின அணிவகுப்பு 'தினை முதல் சிப் வரை' ஊர்தி தேர்வு


ADDED : ஜன 23, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

குடியரசு தின விழா அணிவகுப்பில் கர்நாடக மாநிலம் சார்பில், 'சிறு தானியம் முதல் மைக்ரோ சிப் வரை' என்ற கருப்பொருளில் அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல், மக்கள் தொடர்பு துறை கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர் வெளியிட்டு உள்ள அறிக்கை:

குடியரசு தினத்தை ஒட்டி, வரும் 26ம் தேதி டில்லியில் கர்தவ்யா பாதையில், நாட்டின் ராணுவ பலம், கலாசாரம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடத்தப்படும்.

இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, கர்நாடகா சார்பில், 'கித்துார் ராணி மற்றும் ராணி அப்பக்கா தேவி, கர்நாடக மலர் மகிமை, ஹலகலி பிதரு, தினையில் இருந்து மைக்ரோ சிப் வரை' ஆகிய நான்கு கருப்பொருட்கள் அடங்கிய தலைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.

இது தொடர்பாக நடந்த முதல் கூட்டத்திலேயே, 'தினையில் இருந்து மைக்ரோ சிப் வரை' என்ற கருப்பொருள் தலைப்பு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

இந்தாண்டும் கர்நாடகாவுக்கு அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இம்முறை, 'சிறு தானியம் முதல் மைக்ரோ சிப் வரை' என்ற கருப்பொருளில் ஊர்தி தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், வேளாண்மை, கல்வி, அறிவியல், உயிரி தொழில்நுட்பம், மைக்ரோசிப் உற்பத்தி குறித்த தகவல்கள் இடம் பெறும்.

தானிய உற்பத்தியை ஊக்குவிப்பதிலும், சத்தான உணவை உட்கொள்வதிலும் கர்நாடகா, நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதேபோன்று, பெங்களூரு தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப துறைகளில், உலகளாவிய கவனத்தை ஈர்த்து உள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகா பங்கேற்று வருவது, கன்னடர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us