/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முஸ்லிம் ஊழியர்களுக்கு சலுகை முதல்வருக்கு வேண்டுகோள்
/
முஸ்லிம் ஊழியர்களுக்கு சலுகை முதல்வருக்கு வேண்டுகோள்
முஸ்லிம் ஊழியர்களுக்கு சலுகை முதல்வருக்கு வேண்டுகோள்
முஸ்லிம் ஊழியர்களுக்கு சலுகை முதல்வருக்கு வேண்டுகோள்
ADDED : பிப் 21, 2025 05:21 AM
பெங்களூரு: 'ரம்ஜான் பண்டிகை துவங்க உள்ளதால், ஆந்திரா, தெலுங்கானா போன்று, கர்நாடக அரசில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்' என முதல்வர் சித்தராமையாவுக்கு, மாநில காங்கிரஸ் துணைத்தலைவர்கள் ஹுசேன், சையது அகமது கடிதம் எழுதி உள்ளனர்.
இது தொடர்பாக ஹுசேன் கூறியதாவது:
ரம்ஜான் நாட்களில் முஸ்லிம்கள் காலை முதல் மாலை வரை உணவு சாப்பிடாமல் இருப்பர். அத்தகைய நேரங்களில் அவர்கள் பணி செய்ய முடியாமல் சோர்வடைவர்.
இதனால் ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள், தாமாக முன்வந்து, அம்மாநில அரசில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளன.
அதுபோன்று, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், முஸ்லிம் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக செல்ல அனுமதி அளித்தால், வீட்டுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வசதியாக இருக்கும்.
இது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு, காங்கிரஸ் துணை தலைவர்களாகிய நானும், சையது அகமதுவும் கடிதம் எழுதி உள்ளோம். இது தொடர்பாக முதல்வரின் அரசியல் செயலர் நசிர் அகமதுவிடமும் கூறியுள்ளோம். அவரும், முதல்வரிடம் கூறுவதாக தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.