/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் இயக்க கோரிக்கை
/
மைசூரு - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் இயக்க கோரிக்கை
மைசூரு - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் இயக்க கோரிக்கை
மைசூரு - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் இயக்க கோரிக்கை
ADDED : ஆக 09, 2025 04:47 AM

மைசூரு: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்த மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர், மைசூரில் இருந்து தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில் இயக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக, மைசூரில் யதுவீர் கூறியதாவது:
மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகரில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் திருப்பதிக்கு செல்கின்றனர். எனவே, கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்றும்; திருப்பதி - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயிலை, மைசூரு வரை நீட்டிக்க வேண்டும் என்றும்; மைசூரு - ராமேஸ்வரம் இடையேயும் புதிதாக ரயில் சேவையை துவக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
அவரும், நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார். இதன் மூலம் மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர், குடகு மாவட்ட மக்கள் பயனடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.