தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நாய் குட்டியை கொன்றவரை  கைது செய்ய கோரிக்கை

 நாய் குட்டியை கொன்றவரை  கைது செய்ய கோரிக்கை

 நாய் குட்டியை கொன்றவரை  கைது செய்ய கோரிக்கை


ADDED : ஜூலை 29, 2026 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 11:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு டி.சி., பாளையாவை சேர்ந்தவர் பவுல் ராஜ், 51, ஆட்டோ ஓட்டுநர். இவர் தனது வீட்டருகே விளையாடி கொண்டிருந்த ஒரு மாத நாய் குட்டியை கட்டையால் அடித்து, கடந்த 25ம் தேதி கொலை செய்தார்.

இதை அண்டை வீட்டாரான பிரின்சி என்ற பெண் தட்டி கேட்டார். அவர் அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கே.ஆர்., புரம் போலீஸ் நிலையத்தில் கடந்த 26ம் தேதி பிரின்சி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இருப்பினும், ஆட்டோ ஓட்டுநரான பவுல் ராஜ் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பவுல் ராஜை விரைந்து கைது செய்ய வேண்டும் என விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us