தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 20 சதவீத எரிவாயு மட்டும் பயன்படுத்துங்கள் வணிக சிலிண்டர் பயனாளிகளுக்கு வேண்டுகோள்

 20 சதவீத எரிவாயு மட்டும் பயன்படுத்துங்கள் வணிக சிலிண்டர் பயனாளிகளுக்கு வேண்டுகோள்

 20 சதவீத எரிவாயு மட்டும் பயன்படுத்துங்கள் வணிக சிலிண்டர் பயனாளிகளுக்கு வேண்டுகோள்


ADDED : மார் 24, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: விதான் சவுதாவில் நேற்று மேல்சபையில் கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் ஐவான் டிசோசா கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் முனியப்பா கூறியதாவது:

கர்நாடகாவில் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தும் பயனர்கள், தங்களின் வழக்கமான எரிவாயு நுகர்வில், 20 சதவீதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த புதிய திட்டத்தின் கீழ், கல்வி நிறுவனங்கள், அரசு உணவகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

கல்வி துறைக்கு 4,200 சிலிண்டர்கள், அரசு அமைப்புக்கு 1,200 சிலிண்டர்கள், தங்கும் விடுதிகளு க்கு 10,000 சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இது இவர்கள் பயன்படுத்தும் அன்றாட பயன்பாட்டில், 20 சதவீ தம் மட்டுமே.

வாரத்திற்கு ஐந்து சிலிண்டர்களை பயன்படுத்தி வந்த ஹோட்டல்கள், இனி ஒரு சிலிண்டரை கொண்டு இயங்க வேண்டும். இது தற்காலிக நடவடிக்கை என்றாலும், அவசியமானது.

விவசாய பணிகள் இதற்கிடையில் விவசாய பணிகள், விதை பதப்படுத்துதல், மருந்து உற்பத்தி ஆகியவற்றுக்காக ஒரு நாளைக்கு 500 சிலிண்டர்களும், அவசர தேவைகளுக்காக 205 சிலிண்டர்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

கூடுதலாக 20 சதவீதம் சிலிண்டர் வினியோகம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. சிலிண்டர்களின் மொத்த விற்பனை, கள்ள சந்தையில் விற்பனையை தடுக்கும் வகையில், மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, அனைத்து வணிக பயனர்களும், குறிப்பாக ஹோட்டல்கள், ஒரு வாரத்துக்குள் கெயில் எனும் இந்திய எரிவாயு ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யவில்லை என்றால் சிலிண்டர் வினியோகிக்க முடியாது. இந்த நடவடிக்கை, கள்ளச்சந்தை விற்பனையை தடுக்கும்.

வீட்டு உபயோக பயனாளர்களுக்காக புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒரு முறையும், கிராமப்புறங்களில் 40 நாட்களுக்கு ஒரு முறையும் மட்டுமே எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். இது அனைவருக்கும் சமமான வினியோகத்தை உறுதி செய்ய உதவும்.

விறகு எரிபொருள் அதேநேரத்தில் விறகு எரிபொருள், மின்சாரத்தில் இயங்கும் அடுப்புகள், உயிரி வாயு மற்றும் சோலார் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us