/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெமல் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
/
பெமல் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
பெமல் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
பெமல் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
ADDED : மே 09, 2026 02:30 AM
தங்கவயல்: தங்கவயல் பெமல் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் ஆக்க கோரியும், சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தியும் நேற்று நுழைவுவாயிலில் கூட்டம் நடத்தினர்.
தொழிற் சங்கத் தலைவர் சிவகுமார் பேசியதாவது:
தங்கவயல் பெமலில் ஒப்பந்த தொழிலாளர்களே அதிகமாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தொழிற்பயிற்சி முடித்த தொழில்நுட்பம் அறிந்தவர்களில் பலர், ஒப்பந்த தொழிலாளர்களாகவே உள்ளனர்.
சம்பள உயர்வுக்காக நிர்வாகத்துடன் பலமுறை பேசியும், எந்த பலனும் இல்லை. வயது முதிர்ச்சியில் ஓய்வுபெற்று, எந்த ஒரு சலுகையும் இல்லாமல் வீட்டிற்கு செல்வதே வழக்கமாகி விட்டது. பணி நிரந்தரம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மைசூரு பெமலின் ஒப்பந்த தொழிலாளர் சங்கத் தலைவர் பரமேஸ் பேசுகையில், ''இதே நிலைமை தான், மைசூரு பெமல் தொழிற்சாலையிலும் உள்ளது. எனவே மைசூரு பெமலில் இம்மாதம், 11ம் தேதி பெமல் உணவகத்தில் உணவு சாப்பிடாமல் மறுக்கும் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
சனத், திவாகர், சீனிவாஸ், முகிலரசன் ஆகியோரும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

