/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தமிழ், கன்னடம் ஒப்பிட்டு ஆய்வு செம்மொழி மையத்துக்கு கோரிக்கை
/
தமிழ், கன்னடம் ஒப்பிட்டு ஆய்வு செம்மொழி மையத்துக்கு கோரிக்கை
தமிழ், கன்னடம் ஒப்பிட்டு ஆய்வு செம்மொழி மையத்துக்கு கோரிக்கை
தமிழ், கன்னடம் ஒப்பிட்டு ஆய்வு செம்மொழி மையத்துக்கு கோரிக்கை
ADDED : ஜன 05, 2026 05:43 AM

ஹலசூரு: விஸ்வகவி திருவள்ளுவர் சங்கம் சார்பில் வரும் 16ம் தேதி, திருவள்ளுவர் தின விழா நடத்துவது தொடர்பாக, பெங்களூரு தமிழ் சங்கத்தில், விஸ்வகவி திருவள்ளுவர் சங்க தலைவர் பையப்பனஹள்ளி ரமேஷ், தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், 'பெங்களூரில் தமிழ் மற்றும் கன்னட செம்மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய சிறப்பு மையம் நிறுவ வேண்டும். தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி, வேலை வாய்ப்பில் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆண்டுதோறும் திருவள்ளுவர் விழாவை, அரசு விழாவாக ஒருங்கிணைத்து, இரு மொழி அறிஞர்களையும் கவுரவிக்க வேண்டும்' என்று அரசை வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
சங்க தலைவர் ரமேஷ் பேசுகையில், ''இந்தாண்டு விழாவுக்கு ஒவ்வொருக்கும் தலா 10 பேரை அழைத்து வர வேண்டும். விழா தொடர்பான செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்,'' என்றார்.
விஸ்வகவி திருவள்ளுவர் சங்க துணைத்தலைவர் ஸ்ரீதரன், அமைப்பு செயலர் ராஜசேகரன், செயலர் ராமச்சந்திரன், துணை செயலர் திருநாவுக்கரசு, விழா குழுவினர் விஸ்வநாதன், பாலகிருஷ்ணன் மற்றும் ஆட்டோ சம்பத், முன்னாள் மேயர் சம்பத்ராஜ், கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு தலைவர் செந்தில், தலித் அமைப்புகள், முத்துமணி நன்னன், ராஜகுரு, கோவலன், தேன் மொழியான், உமா மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள், காங்கிரசின் சரவணன், ராஜேந்திரன், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

