/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., தலைவர் பதவியில் விலகல்? துணை முதல்வர் சிவகுமார் சூசகம்
/
காங்., தலைவர் பதவியில் விலகல்? துணை முதல்வர் சிவகுமார் சூசகம்
காங்., தலைவர் பதவியில் விலகல்? துணை முதல்வர் சிவகுமார் சூசகம்
காங்., தலைவர் பதவியில் விலகல்? துணை முதல்வர் சிவகுமார் சூசகம்
ADDED : நவ 20, 2025 03:55 AM

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக, துணை முதல்வர் சிவகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திராவின் பிறந்தநாளையொட்டி, பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
டில்லியில் உள்ள இந்திராவின் கல்லறையை சுற்றியுள்ள பகுதியை மேம்படுத்துவது; தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில் கிரானைட் கற்கள் பதிக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன். நானும், என் தம்பி சுரேஷும் எங்களால் முடிந்ததை கட்சிக்காக செய்துள்ளோம். நான் எங்கிருந்தாலும் பரவாயில்லை. மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்.
கட்சி, கோவில் போன்றது என்பதை சிலர் மறந்துவிட்டனர்.
நான் எவ்வளவு காலம் தலைவர் பதவியில் இருப்பேன் என்று தெரியவில்லை. என் பதவி காலத்தில் 100 காங்கிரஸ் அலுவலகங்கள் கட்டுவதே என் விருப்பம்.
துணை முதல்வராக பதவி ஏற்ற அன்றே, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய நினைத்தேன்.
இந்த பதவியில் நான் என்றென்றும் நீடிக்க முடியாது. மார்ச் மாதம் வந்தால் ஆறு ஆண்டுகள் ஆகிவிடும். வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்க தயாராக உள்ளேன்.
கார்கே, ராகுல் ஆகியோர் இன்னும் சில நாட்கள் பதவியில் தொடரும்படி கேட்டுக் கொண்டனர். வேலை பார்ப்பவன் ஒருவன்; லாபம் பெறுபவன் இன்னொருவன்; முதல் ஆளுடன் சேர வேண்டும் என்று, இந்திரா அடிக்கடி கூறுவார்.
இவ்வாறு பேசினார்.
கடந்த 2023 தேர்தலில் சிவகுமார் தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் சித்தராமையா முதல்வராகி விட்டார்.
இதை குத்திக்காட்டும் வகையில், 'வேலை பார்ப்பவன் ஒருவன்; லாபம் பெறுபவன் இன்னொருவன்' என்று சிவகுமார் பேசியதாக கூறப்படுகிறது.

