/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகளின் கழுத்தை அறுத்த தாய் நரபலி கொடுக்க முயற்சியா?
/
மகளின் கழுத்தை அறுத்த தாய் நரபலி கொடுக்க முயற்சியா?
மகளின் கழுத்தை அறுத்த தாய் நரபலி கொடுக்க முயற்சியா?
மகளின் கழுத்தை அறுத்த தாய் நரபலி கொடுக்க முயற்சியா?
ADDED : நவ 20, 2025 03:55 AM
சம்பிகேஹள்ளி: கோவில் முன் மகளின் கழுத்தை அரிவாளால் அறுத்துக் கொல்ல முயன்ற தாயை போலீஸ் தேடுகிறது. நரபலி கொடுக்க முயற்சியா? என்றும் விசாரணை நடக்கிறது.
பெங்களூரு, சம்பிகேஹள்ளி அக்ரஹாரா லே - அவுட்டில் வசிப்பவர் சரோஜம்மா, 55. இவரது மகள் ரம்யா, 22. இவருக்கும், ஆனேக்கல்லை சேர்ந்த சோமசேகர், 26, என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ரம்யாவுக்கும், குழந்தைகளுக்கும் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனதால், சோமசேகர் வெறுப்படைந்தார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு ரம்யா வருவதும், அவரை சோமசேகர் சமாதானம் செய்து அழைத்துச் செல்வதும், சில மாதங்களாக அடிக்கடி நடந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, கணவரிடம் சண்டை போட்டு, ரம்யா, தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு தாய், மகள் இடையே ஏதோ காரணத்துக்காக தகராறு ஏற்பட்டது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ரம்யாவை எழுப்பிய சரோஜம்மா, 'வீட்டின் அருகே உள்ள ஹரிஹரேஸ்வரர் கோவிலுக்கு சென்று வரலாம்' என கூறினார்.
தாயும், மகளும் கோவிலுக்கு சென்றனர். கோவில் வெளியே நின்று ரம்யா சாமி கும்பிட்டார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ரம்யாவின் கழுத்தை அறுத்துவிட்டு, தாய் அங்கிருந்துதப்பினார்.
ரத்த வெள்ளத்தில் கோவில் முன் ரம்யா அமர்ந்திருந்தார். அந்த வழியாக சென்ற சிலர், ரம்யாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தலைமறைவாக உள்ள சரோஜம்மாவை, சம்பிகேஹள்ளி போலீசார் தேடுகின்றனர்.
மகளுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை நரபலி கொடுக்க சரோஜம்மா முயன்றாரா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.

