தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மட்டன் என மாட்டுக்கறியை விற்ற உணவக உரிமையாளர்கள் கைது

 மட்டன் என மாட்டுக்கறியை விற்ற உணவக உரிமையாளர்கள் கைது

 மட்டன் என மாட்டுக்கறியை விற்ற உணவக உரிமையாளர்கள் கைது


ADDED : ஜூன் 01, 2026 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொம்மனஹள்ளி: வாடிக்கையாளர்களுக்கு, ஆட்டிறைச்சி என, கூறி மாட்டுக்கறியை வழங்கி மோசடி செய்த, ஹோட்டல் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து, போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரின், பொம்மனஹள்ளியில், ' ஐசிரி ஹப் காயலோரம் ரெஸ்டாரென்ட்' உள்ளது. இதை கேரளாவை சேர்ந்த ஜிஜூ மற்றும் ஷிபு ஆகியோர் நடத்துகின்றனர். இந்த உணவகத்தில், மட்டன் என கூறி, மாட்டுக்கறியை கொடுப்பதாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து, தொடர்ந்து புகார் வந்தது.

இந்த உணவக உணவு 'மெனு கார்டில்' எந்த இடத்திலும், மாட்டுக்கறியை உணவு குறிப்பிடப்படவில்லை. ஆனால், மட்டன் ஆர்டர் செய்தால், மாட்டுக்கறியை உணவு சப்ளை செய்வதாக தெரிந்தது. இதை தெரிந்து கொள்வதற்காக, போலீஸ் அதிகாரி ஒருவர், சாதாரண உடையில் உணவகத்திற்கு அனுப்பப்பட்டார். அவரும் மட்டன் ஆர்டர் செய்து வாங்கி வந்தார். இதை ஆய்வு செய்த போது, மட்டன் அல்ல, மாட்டுக்கறியை என்பது தெரிந்தது.

இதையடுத்து, அந்த உண வக உரிமையாளர்கள் ஜிஜூ, ஷிபு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கர்நாடக பசுவதை தடை மற்றும் மாடுகள் பாதுகாப்பு சட்டம் - 2020 ன் கீழ், வழக்கு பதிவாகியுள்ளது.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு அனுப்பியுள்ளோம். அந்த உணவகத்தின் மற்றொரு பங்குதாரர் அபிலாஷ், தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us