தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஓய்வு பெற்றவருக்கு பதவி உயர்வு அரசின் குளறுபடியால் சர்ச்சை

 ஓய்வு பெற்றவருக்கு பதவி உயர்வு அரசின் குளறுபடியால் சர்ச்சை

 ஓய்வு பெற்றவருக்கு பதவி உயர்வு அரசின் குளறுபடியால் சர்ச்சை


ADDED : பிப் 15, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக அரசு, கே.ஏ.எஸ்., அதிகாரிகள், 20 பேருக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது. அந்தப் பட்டியலில், பணி ஓய்வு பெற்று, தற்போது சன்னியாசியாக வாழும் ஒருவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று கூறியுள்ளதாவது:

மாநில அரசு, கே.ஏ.எஸ்., அதிகாரிகள், 20 பேருக்கு நேற்று முன்தினம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. அந்தப் பட்டியலில், ஹெச்.எல்.நாகராஜ் என்பவரின் பெயரும் உள்ளது. இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், சன்னியாசம் பெற்று, தற்போது நிஷ்சலானந்தநாத சுவாமிகள் என்ற பெயரில் ஆன்மிக வாழ்க்கை நடத்தி வருகிறார். அதாவது, பணி ஓய்வு பெற்ற பின், சன்னியாசியாக வாழும் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கி, அரசு குளறுபடி செய்துள்ளது.

இது, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் நிர்வாக திறனை கேள்விக்குறியாக்கி உள்ளது. கோப்புகளில் கையெழுத்திடும் முன், அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களா, இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது. ஓய்வு பெற்றவர் யார், பணியில் இருப்பவர் யார் என்ற தகவலே, அரசுக்கு தெரியாதது துரதுருஷ்டமாகும். இது, எதிர்பாராமல் நடந்த தவறு அல்ல. ஆட்சி சீர்குலைவின் வெளிப்பாடு. வரும் நாட்களிலும், இதுபோன்ற குளறுபடிகள் நடக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us