/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'போக்சோ' வழக்கில் மீண்டும் விசாரணை; எடியூரப்பா மனு 23க்கு ஒத்திவைப்பு
/
'போக்சோ' வழக்கில் மீண்டும் விசாரணை; எடியூரப்பா மனு 23க்கு ஒத்திவைப்பு
'போக்சோ' வழக்கில் மீண்டும் விசாரணை; எடியூரப்பா மனு 23க்கு ஒத்திவைப்பு
'போக்சோ' வழக்கில் மீண்டும் விசாரணை; எடியூரப்பா மனு 23க்கு ஒத்திவைப்பு
ADDED : ஆக 20, 2025 11:46 PM

பெங்களூரு : தன் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை, விசாரணை நீதிமன்றம் புதிதாக விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்க கோரி, பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை, கர்நாடக உயர்நீதிமன்றம், வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பெங்களூரில் தனது இல்லத்திற்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது, சதாசிவ நகர் போலீசில் போக்சோ வழக்கு பதிவானது. பின், இவ்வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கை ரத்து செய்யும்படி எடியூரப்பா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், எடியூரப்பாவை கைது செய்ய, சி.ஐ.டி., போலீசாருக்கு தடை விதித்ததுடன், புதிதாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் எடியூரப்பா மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி அருண் முன் வந்தது.
எடியூரப்பா தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்கள், வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களுடன், எடியூரப்பாவின் மனுவையும் விசாரணைக்கு பரிசீலிக்க வேண்டும். எனவே விசாரணையை செப்., முதல் வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்' என்றார்.
அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தனக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் சிறுமி குற்றம்சாட்டி உள்ளார்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளதால், விசாரணை நடக்க வேண்டும். சாட்சிகளிடம் விரைவில் விசாரிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, இவ்வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருவதால், இவ்விசாரணைக்கு தடை விதிக்க கூடாது' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அருண், வழக்கு விசாரணையை, ஆக., 23ம் தேதி ஒத்திவைத்தார்.

