/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹாசனாம்பா கோவிலில் சிறப்பு தரிசனம் காரை தடுத்ததால் ரேவண்ணா கோபம்
/
ஹாசனாம்பா கோவிலில் சிறப்பு தரிசனம் காரை தடுத்ததால் ரேவண்ணா கோபம்
ஹாசனாம்பா கோவிலில் சிறப்பு தரிசனம் காரை தடுத்ததால் ரேவண்ணா கோபம்
ஹாசனாம்பா கோவிலில் சிறப்பு தரிசனம் காரை தடுத்ததால் ரேவண்ணா கோபம்
ADDED : அக் 14, 2025 04:44 AM

ஹாசன்: ஹாசனாம்பா கோவில் வளாகத்தில் நுழைய விடாமல், தங்களின் காரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது, ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா அதிருப்தி தெரிவித்தார்.
ஹாசனின் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சில நாட்கள் திறக்கப்படும். தற்போது கோவில் திறந்துள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, தரிசனம் செய்கின்றனர்.
ம.ஜ.த.,வின் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவும், அவரது மனைவி பவானியும் நேற்று காலை ஹாசனாம்பா கோவிலுக்கு வந்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சிறப்பு பாதுகாப்பு உள்ளது.
பாதுகாப்பு ஊழியர்களுடன் காரில் வந்தனர். கோவில் வளாகத்தில் கார் நுழைய அனுமதி இல்லை என்பதால், வருவாய்த்துறை அதிகாரிகள், ரேவண்ணாவின் காரை தடுத்து நிறுத்தினர். இதனால் அதிகாரிகளிடம் ரேவண்ணா வாக்குவாதம் செய்தார். அதன்பின் காரில் இருந்து இறங்கி, அனைவரும் கோவிலுக்கு சென்றனர். 1,000 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்று வரிசையில் நிற்காமல் நேரடியாக அம்மனை தரிசிக்கச் சென்றனர்.
வரிசையில் வரும்படி ஊழியர்கள் அறிவுறுத்தியும், தம்பதி பொருட்படுத்தவில்லை.
அவர்கள் அரைமணி நேரத்துக்கும் மேலாக, சிறப்பு பூஜைகள் செய்தனர். தங்கள் குடும்பத்தை சேர்ந்த தேவகவுடா, குமாரசாமி, அனிதா குமாரசாமி, நிகில் குமாரசாமி, சூரஜ் ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா உட்பட, அனைவரின் பெயரிலும் அர்ச்சனை செய்தனர்.
பக்தர்கள் மணிக்கணக்கில், வரிசையில் காத்திருந்தனர். ஆனால், ரேவண்ணாவும், அவரது மனைவியும் ஊழியர்களின் அறிவுறுத்தலை அலட்சியப்படுத்திவிட்டு, நேரடியாக கோவிலுக்குள் சென்றதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.
வி.ஐ.பி.,க்கள் மற்றும் வி.வி.ஐ.பி.,க்களுக்கு, ஹாசனாம்பிகா கோவிலில் அளிக்கப்படும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்து, ஹாசன் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இவர்கள் கோவிலுக்கு வர, தனியாக நேரம் நிர்ணயித்துள்ளது.
ஆனால் ரேவண்ணாவும், பவானியும் தங்களுக்கு வசதியான நேரத்தில் கோவிலுக்கு வந்ததுடன், வரிசையில் நிற்காமல் நேரடியாக, கோவிலுக்குள் சென்றதால் பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.