/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநகராட்சியிடம் வந்த வருவாய் சொத்து கட்டட திட்டங்கள்
/
மாநகராட்சியிடம் வந்த வருவாய் சொத்து கட்டட திட்டங்கள்
மாநகராட்சியிடம் வந்த வருவாய் சொத்து கட்டட திட்டங்கள்
மாநகராட்சியிடம் வந்த வருவாய் சொத்து கட்டட திட்டங்கள்
ADDED : ஏப் 11, 2025 06:57 AM
பெங்களூரு: பெங்களூரில் உள்ள வருவாய் சொத்துகளை பரிமாற்றம் செய்யும் அதிகாரமும், அவற்றின் கட்டட திட்டங்களை அங்கீகரிக்கும் அதிகாரமும் இதற்கு முன் வரை பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்திடம் இருந்தது.
இந்த அதிகாரத்தை, தற்போது பெங்களூரு மாநகராட்சிக்கு வழங்கி, அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், வருவாய் சொத்துக்களை பரிமாற்றம் செய்வதும் சுலபமாகும் என கூறப்படுகிறது.1 ஏக்கர் வரை அளவுடைய நிலத்தை வருவாய் சொத்தாக மாற்றுவதற்கு, 'ஏ' வகை சான்றிதழ் பெறுவது கட்டாயம் ஆகும். இந்த சான்றிதழ் பெற்ற பின்பு தான் நிலத்திற்கு பட்டா, கட்டட வடிவமைப்பு திட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.
தற்போது, இந்த அனைத்து அதிகாரங்களும் பெங்களூரு மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வந்து உள்ளது.

