/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'அன்ன பாக்யா' பயனாளிகளுக்கு பணத்துக்கு பதிலாக அரிசி வழங்கல்
/
'அன்ன பாக்யா' பயனாளிகளுக்கு பணத்துக்கு பதிலாக அரிசி வழங்கல்
'அன்ன பாக்யா' பயனாளிகளுக்கு பணத்துக்கு பதிலாக அரிசி வழங்கல்
'அன்ன பாக்யா' பயனாளிகளுக்கு பணத்துக்கு பதிலாக அரிசி வழங்கல்
ADDED : பிப் 20, 2025 06:37 AM

பெங்களூரு: ''அன்னபாக்யா பயனாளிகளுக்கு இனி பணத்துக்கு பதிலாக, அரிசியே வழங்க, அரசு முடிவு செய்துள்ளது,'' என, மாநில உணவு பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலின்போது, பி.பி.எல்., குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின், தேவையான அரிசி கிடைக்காததால், ஐந்து கிலோ அரிசியும், மீதமுள்ள ஐந்து கிலோ அரிசிக்கு பதிலாக, கிலோவுக்கு தலா 35 ரூபாய் வீதம் 170 ரூபாய் வழங்கி வந்தது.
இதில், 'கடந்த நான்கு மாதங்களாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை' என பா.ஜ., குற்றஞ்சாட்டியிருந்தது.
இதற்கு அமைச்சர் முனியப்பா, 'இரண்டு மாதங்கள் மட்டுமே வழங்கப்படவில்லை' என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அன்ன பாக்யா திட்டத்தின் கீழ், 5 கிலோ அரிசிக்கு பதிலாக, 170 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. பிப்ரவரி மாதம் முதல் பணத்துக்கு பதிலாக மொத்தம் 10 கிலோ அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆரம்பத்தில் மத்திய அரசு, ஒரு கிலோ அரிசி 28 ரூபாய்க்கு கட்டணம் நிர்ணயம் செய்திருந்தது. தற்போது அதை 22.50 ரூபாயாக குறைத்துள்ளது. எனவே, நமக்கு மாதத்துக்கு 2.29 லட்சம் டன்னும், ஆண்டுக்கு 27.48 லட்சம் டன்னும் அரிசி தேவைப்படுகிறது.
மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு, எங்கள் துறை எழுதிய கடிதத்துக்கு ஒப்புதல் அளித்து, அரிசி வழங்குவதாக தெரிவித்துள்ளார். 2024 நவம்பர் வரை பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசிக்கான பணம் வழங்கி உள்ளோம்.
டிசம்பர், ஜனவரி மாதத்துக்கு மட்டுமே பணம் வழங்க வேண்டி உள்ளது. விரைவில் இந்த பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
எங்கள் அரசு, 2013 முதல் அன்ன பாக்யா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2023 முதல் அரிசியாகவும், பணமாகவும் கொடுத்து எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

