/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விசாரணைக்கு ஆஜராக 20 நாள் அவகாசம் கேட்டுள்ள ரிக்கி ராய்
/
விசாரணைக்கு ஆஜராக 20 நாள் அவகாசம் கேட்டுள்ள ரிக்கி ராய்
விசாரணைக்கு ஆஜராக 20 நாள் அவகாசம் கேட்டுள்ள ரிக்கி ராய்
விசாரணைக்கு ஆஜராக 20 நாள் அவகாசம் கேட்டுள்ள ரிக்கி ராய்
ADDED : மே 18, 2025 08:54 PM

ராம்நகர் : துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக ரிக்கி ராய் 20 நாள் அவகாசம் கேட்டு இருப்பதாக, ராம்நகர் எஸ்.பி., சீனிவாஸ் கவுடா கூறினார்.
மறைந்த முன்னாள் நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராய், 35. இவர், கடந்த மாதம் 19 ம் தேதி இரவு ராம்நகர் பிடதி பண்ணை வீட்டில் இருந்து பெங்களூருக்கு காரில் வந்தார். கார் மீது மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
கார் கதவில் முட்டியதில் ரிக்கி ராய் மூக்கு உடைந்தது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ரிக்கி ராயின் சித்தி அனுராதா, முத்தப்பா ராயின் கூட்டாளி ராகேஷ் மல்லி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவானது. அனைவரும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
கார் மீது துப்பாக்கியால் சுட்ட ரிக்கி ராயின் பாதுகாவலர் விட்டல் மோனப்பா கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் ராம்நகர் எஸ்.பி., சீனிவாஸ் கவுடா நேற்று அளித்த பேட்டியில், ''துப்பாக்கி சூடு வழக்கில் ரிக்கி ராய்க்கு சம்மன் அனுப்பி உள்ளோம். விசாரணைக்கு ஆஜராக 20 நாட்கள் கால அவகாசம் கேட்டு உள்ளார். வழக்கை நிறைய கோணங்களில் நாங்கள் விசாரிக்கிறோம்.
''தடய அறிவியல் ஆய்வகத்தில் இருந்து இன்னும் சில அறிக்கைகள் கிடைக்க வேண்டி உள்ளது. அந்த அறிக்கை வந்த பின், ரிக்கி ராயிடமும் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். இந்த வழக்கில் விட்டல் முக்கிய குற்றவாளி. அவரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளோம்,'' என்றார்.