/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.2.50 கோடியில் சாலை மேம்பாடு: பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம்
/
ரூ.2.50 கோடியில் சாலை மேம்பாடு: பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம்
ரூ.2.50 கோடியில் சாலை மேம்பாடு: பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம்
ரூ.2.50 கோடியில் சாலை மேம்பாடு: பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம்
ADDED : பிப் 20, 2026 04:55 AM

தங்கவயல்: தங்கவ யல் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிகுப்பா கிராமத்தில், சாலை மேம்பாட்டு பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
கள்ளிகுப்பா கிராமத்திலிருந்து சின்னப்பனஹள்ளி, ஜெயமங்கலா வழியாக மத்திநாயக்கனஹள்ளி கிராமம் வரை, 2.50 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பேசியதாவது:
நடப்பு, 2025 - 26ம் ஆண்டில், முதல்வரின் சிறப்பு நிதியின் கீழ், கிராமப்புற சாலைகள் மேம்பாட்டிற்காக, 7.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் பல சாலைகள் சேதமடைந்திருந்ததால், மாணவர்கள், கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், பாதிப்புள்ள சாலைகளை மேம்படுத்துமாறு, பொதுமக்களும், கிராம முக்கிய பிரமுகர்களும் வலியுறுத்தி வந்தனர்.
மழை காலத்தில் நல்லூர் அருகே உள்ள பாலங்களின் வழியாக நீர் ஓடும் போது, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வந்ததால், புதிய பாலங்கள் கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டன. பூமி பூஜை நடைபெற்ற இந்தச் சாலையில், சின்னப்பனஹள்ளி அருகே பாலாறு கால்வாய்க்கு ஒரு பாலம் அவசியம் என்று உள்ளூர் கிராம மக்க ள் மற்றும் தலைவர்கள் தெரிவித்தனர். அதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்.
மேலும், சாலை மேம்பாட்டு பணிகளில் தரத்தை உயர்த்த, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஒப்பந்ததாரர்கள் பணிகளை முடிக்க வேண்டும்.
இவ்வாறு ரூபகலா பேசினார்.

