/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.24 கோடி 'கோகைன்' விமான நிலையத்தில் பறிமுதல்
/
ரூ.24 கோடி 'கோகைன்' விமான நிலையத்தில் பறிமுதல்
ADDED : பிப் 20, 2026 04:55 AM

தேவனஹள்ளி: பிரேசிலில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 24 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன், பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு விமானம் வந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் போதை பொருள் கடத்தி வந்ததாக, பெங்களூரு போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. விமான நிலைய அதிகாரிகள், சுங் கத்துறையினர் உதவியுடன் பயணியரை, போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தினர்.
ஒரு பயணி வைத்திருந்த லக் கேஜ் பேக் சற்று வித்தியாசமாக இருந்தது. அதாவது மற்ற பேக்குகளை விட, இந்த பேக்கின் அகலம் அதிகமாக இருந்தது.
சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பேக்கிற்குள் பார்த்த போது துணிகள் இருந்தன. துணிகளை வெளியே எடுத்து பேக்கை பிரித்து பார்த்தபோது, அந்த பேக்கிற்குள் பெண்கள் பயன்படுத்தும், நான்கு கை பைகள் தைக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பைகளை திறந்து பார்த்த போது கோகைன் இருந்தது. எடை பார்த்த போது 4.70 கிலோ இருந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 23.88 கோடி ரூபாய் ஆகும்.
பயணியிடம் விசாரித்த போது, தென் அமெரிக்காவின் பிரேசில் இருந்து, கோகைன் கடத்தியதை ஒப்பு கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர், விபரம் வெளியாகவில்லை.

