/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.27 கோடி மதிப்பில் சாலை ஒரே நாளில் பெயர்ந்த தார்
/
ரூ.27 கோடி மதிப்பில் சாலை ஒரே நாளில் பெயர்ந்த தார்
ரூ.27 கோடி மதிப்பில் சாலை ஒரே நாளில் பெயர்ந்த தார்
ரூ.27 கோடி மதிப்பில் சாலை ஒரே நாளில் பெயர்ந்த தார்
ADDED : செப் 17, 2025 08:38 AM
மாண்டியா : கே.ஆர்.பேட்டின், அரசு மருத்துவமனை வளாகத்தின் சாலைக்கு போடப்பட்ட தார், ஒரே நாளில் பெயர்ந்தது. பணியில் ஊழல் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தாலுகாவின், அரசு மருத்துவமனை வளாக சாலை சீர்குலைந்ததால், சரி செய்யும்படி அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
இதன்படி, 27 கோடி ரூபாய் செலவில் தார் போடும் பணிகளை, பொதுப்பணித்துறை மேற்கொண்டது.
பணிகளின் ஒப்பந்தம் பெற்றவர், சாலைகளுக்கு தார்போடும் பணிகளை சில நாட்களுக்கு முன்பு முடித்திருந்தார். ஆனால் ஒரே நாளில் தார் பெயர்ந்து வந்துள்ளது.
அதிருப்தி அடைந்துள்ள பொது மக்கள், 'பணிகள் தரமாக நடக்கவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு என்ன பயன்? ஒப்பந்ததாரர் பணிகளை நடத்தியபோது, அதிகாரிகள் வந்து கண்காணிக்கவில்லை. பணிகள் முடிந்த பின்னரும், தரமாக பணி நடந்ததா என்பதை ஆய்வு செய்யவில்லை.
'இதனால் ஒப்பந்ததாரர் பெயரளவுக்கு பணிகளை நடத்தியுள்ளார். ஒப்பந்ததாரர்களுடன், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுள்ளனர். இதுகுறித்து, விசாரணை நடத்த வேண்டும்' என, வலியுறுத்துகின்றனர்.