/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் சட்டம் - ஒழுங்கை சிதைக்க ரவுடிகள் அட்டகாசம்
/
தங்கவயலில் சட்டம் - ஒழுங்கை சிதைக்க ரவுடிகள் அட்டகாசம்
தங்கவயலில் சட்டம் - ஒழுங்கை சிதைக்க ரவுடிகள் அட்டகாசம்
தங்கவயலில் சட்டம் - ஒழுங்கை சிதைக்க ரவுடிகள் அட்டகாசம்
ADDED : மார் 25, 2025 01:09 AM
தங்கவயல் பொதுமக்கள் அச்சத்தை போக்க, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, ரவுடிகள் அட்டகாசத்தை அடக்க, போலீசாரின் அதிரடி நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
தங்கச்சுரங்கம் செயல்பட்டு வந்த போது, பாதுகாப்பு அவசியத்தை உணர்ந்து, தங்கவயலுக்கு சிறப்பு மாவட்ட போலீஸ் தகுதி வழங்கப்பட்டது. இதன் காரணமாகவே நீதிமன்றம், துணை சிறைச்சாலை அமைக்கப்பட்டது.
மூடல்
தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில் பெமல் நகர், உரிகம், சாம்பியன், மாரிகுப்பம், ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டை, பேத்தமங்களா, பங்கார்பேட்டை, காம சமுத்ரா ஆகிய ஒன்பது போலீஸ் நிலையங்கள் இயங்கின. தங்கவயலில் 1832 ம் ஆண்டு முதலே போலீஸ் நிலையங்கள் இயங்கி வந்துள்ளன.
இதில் 2021 ஆகஸ்ட் 13ல் மாரி குப்பம், சாம்பியன் ரீப் ஆகிய இரண்டு போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன. இதன் இரு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளை ஆண்டர்சன்பேட்டை, உரிகம் போலீஸ் நிலையங்களில் இணைத்துவிட்டனர்.
சூறையாடல்
தங்கவயல் தொகுதிக்கு உட்பட்ட கேசம்பள்ளியிலும்; பங்கார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பூதிக்கோட்டையிலும் புதியதாக இரு போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டது. மாரிகுப்பம், சாம்பியன் ரீப் போலீஸ் நிலையங்கள் இல்லாமல் போனதால், ரவுடிகள் அட்டகாசம் தலை துாக்கியுள்ளது.
தங்கச்சுரங்க நிறுவனத்தின் தங்க மண் திருட்டு, சுரங்க சொத்துகள் சூறையாடல் நடந்தவாறு உள்ளது. திருட்டு நடந்தாலும் போலீஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் செய்யாததால் போலீசாருக்கு வேலை பளு இல்லை.
சுரங்க நிறுவன மருத்துவமனையில் இங்கிலாந்து நாட்டின் உயர்தர மருத்துவ கருவிகள் மாயமாகி விட்டன. விலை உயர்ந்த தேக்கு, சந்தன மரங்களையும் விட்டு வைக்கவில்லை.
ரவுடிகள் அட்டகாசம் தலை துாக்கி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை, கஞ்சா விற்பனை நடந்தவாறு உள்ளது. நேற்று முன்தினம் ரவுடி சிவகுமாரை மாரிகுப்பம் பகுதியில் கொலை செய்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் ரவுடிகள் உருவாகி வருகின்றனர்.
போலீஸ் நிலையம் தான் இல்லாமல் போனது. ஆனால், போலீஸ் அவுட் போஸ்ட் ஆவது ஏற்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ரயில் இட மாற்றம்
மாரிகுப்பம் ரயில் நிலையத்தில் போதுமான இடம் வசதி இருந்தும், திருட்டு, ரவுடிகளின் தொல்லைகளாலும், உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும் இரவில் ரயிலை மாரிகுப்பத்தில் நிறுத்தாமல், பங்கார்பேட்டைக்கு இயக்கி சென்று விடுகின்றனர்.
அண்மையில் சாம்ராஜ்பேட்டையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவத்தில் சிலரை சிறையில் அடைக்கப்பட்டனர். ஆண்டர்சன் பேட்டை 2 வது பிளாக் பகுதியில் அடிதடி தகராறு அடிக்கடி சகஜமாகி விட்டது.
ஒருசில பகுதிகளில் புதியதாக ரவுடிகள் உருவாகி வருகின்றனர். சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்த வண்ணம் உள்ளது.
- நமது நிருபர் --