தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரவுடி பிறந்த நாளில் போதை: 15 பேர் கைது

 ரவுடி பிறந்த நாளில் போதை: 15 பேர் கைது

 ரவுடி பிறந்த நாளில் போதை: 15 பேர் கைது


ADDED : ஏப் 05, 2026 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 04:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாம்ராஜ்நகர்: பிரபல ரவுடியின் பிறந்த நாள் விழாவில், கஞ்சா, சரஸ் போன்ற போதை பொருள் உபயோகித்த, 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் பகுதியில் வசிப்பவர் பயாஸ் கான். இவர் மீது கடத்தல், போதை பொருள் தொடர்பான பல வழக்குகள் உள்ளன. இவரது வீட்டில் நேற்று இரவு, பெங்களூரை சேர்ந்த பிரபல ரவுடி ஜஹீரின் பிறந்த நாள் விழா நடப்பதாக, மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர்.

கஞ்சா, சரஸ் போன்ற போதைப்பொருட்களை உபயோகப்படுத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து, அங்கிருந்த, 50க்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 15 பேர் போதைப்பொருள் எடுத்து கொண்டது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us