/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராய் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் விசாரணையில் கண்டுபிடிப்பு
/
ராய் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் விசாரணையில் கண்டுபிடிப்பு
ராய் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் விசாரணையில் கண்டுபிடிப்பு
ராய் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் விசாரணையில் கண்டுபிடிப்பு
ADDED : ஏப் 11, 2026 04:24 AM

பெங்களூரு: மன அழுத்தமே தொழில் அதிபர் ராய் தற்கொலைக்கு காரணம் என, எஸ்.ஐ.டி., விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் சி.ஜே.ராய், 57. தொழில் அதிபர். ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறந்தார். கடந்த ஜன., 30ம் தேதி, பெங்களூரு அசோக்நகரில் உள்ள தன் அலுவலகத்தில், துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் அவரது அலுவலகத்தில், கேரள வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விசாரணை என்ற பெயரில், அதிகாரிகள் கொடுத்த தொல்லையே, ராய் தற்கொலைக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்ததால், கர்நாடக அரசு எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.
அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வருமான வரி அதிகாரிகள் மீது எந்த தவறும் இல்லை என, தெரிய வந்தது. மன அழுத்தத்தால் ராய் பாதிக்கப்பட்டு இருந்ததும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்ததும் கண்டறியப்பட்டது. நடிகை ஒருவரின் ஹனிடிராப் வலையில் சிக்கினார் என்றும் பேசப்பட்டது.
தற்போது எஸ்.ஐ.டி., நடத்திய விசாரணையில், மன அழுத்தமும், அதற்கு அவர் சரியாக சிகிச்சை எடுத்து கொள்ளாததும், தற்கொலை செய்ய காரணம் என, தெரியவந்து உள்ளது. கூடிய விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

