sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயல் அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்க தேர்தலுக்கு இன்று மனு தாக்கல்

 தங்கவயல் அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்க தேர்தலுக்கு இன்று மனு தாக்கல்

 தங்கவயல் அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்க தேர்தலுக்கு இன்று மனு தாக்கல்


ADDED : ஏப் 11, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 04:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயலில் உள்ள அரசு துவக்க பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின், 2026 - 2031ம் ஆண்டுக்கான செயற்குழுவுக்கு எட்டு பேரை தேர்ந்தெடுக்க, வரும், 19 ம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்றே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தங்கவயலில் துவக்க பள்ளி ஆசிரியர்கள், 366 பேர் உள்ளனர். இவர்கள் ஓட்டளித்து ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் கொண்ட செயற்குழுவை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தல் அதிகாரியாக டபிள்யு.டார்ஜன் நியமிக்கப் பட்டுள்ளார்.

தேர்தல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வேட்பு மனு தாக்கல்: இன்று காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.

மனு தாக்கல் கடைசி: நாளை மாலை 6:00 மணி வரை.

மனு பரிசீலனை: 13ம் தேதி காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.

மனு வாபஸ் பெற கடைசி: 14ம் தேதி மாலை 6:00 மணி வரை.

அன்று மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

ஓட்டுப் பதிவு 19ம் தேதி காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. அதனை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப் படும்.

வெற்றி பெற்றவர்களில் தலைவர், துணைத் தலைவர், செயலர், துணைச் செயலர், செயற்குழு உறுப்பினர்கள் நான்கு பேர் என, நியமனம் செய்து கொள்வர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us