/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.யு., தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் அதிகாரிகள் அலட்சியம்
/
பி.யு., தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் அதிகாரிகள் அலட்சியம்
பி.யு., தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் அதிகாரிகள் அலட்சியம்
பி.யு., தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஏப் 11, 2026 04:23 AM
பெங்களூரு: பி.யு., தேர்வு முடிவுகளை வெளியிட்டதில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இது, அமைச்சருக்கு தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகாவில் பி.யு., 2ம் ஆண்டு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. மாணவர்கள் தேர்ச்சி, 86.48 சதவீதமாக இருந்தது. இது, வரலாற்று சிறப்புமிக்க தேர்வு முடிவு என்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா பெருமையாக கூறினார்.
ஆனால், தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டது அம்பலமாகி உள்ளது. திகந்த் என்ற மாணவர் டிஜி லாக்கர் செயலி மூலம் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்த போது அதிர்ச்சி அடைந்தார். ஹிந்தி பாடத்தில் அவர், 111 மதிப்பெண்கள் பெற்றதாக இருந்தது.
தேர்வே, 100 மதிப்பெண்களுக்கு தான் நடக்கிறது. எப்படி, 111 மதிப்பெண்கள் என மாணவருக்கும், அவரது பெற்றோருக்கும் தெரியவில்லை. திகந்த் எடுத்த மதிப்பெண் சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியத்திற்கு எதிர்ப்பு கிளம்பின.
இவர்கள் எத்தனை மாணவர்கள் கல்வியில் விளையாடினாரோ என்று கருத்து பதிவிடுகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க தேர்வு முடிவு என்று கூறிய, அமைச்சர் மது பங்காரப்பா, அதிகாரிகளால் தர்மசங்கடத்திற்கு ஆளாகி உள்ளார்.

