தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வாடகை பாக்கி கடைகளுக்கு 'சீல்' ; ரா.பேட்டை நகராட்சி எச்சரிக்கை

 வாடகை பாக்கி கடைகளுக்கு 'சீல்' ; ரா.பேட்டை நகராட்சி எச்சரிக்கை

 வாடகை பாக்கி கடைகளுக்கு 'சீல்' ; ரா.பேட்டை நகராட்சி எச்சரிக்கை


ADDED : பிப் 04, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: ''வாடகை பாக்கியை செலுத்தா விட்டால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும்,'' என, ராபர்ட்சன் பேட்டை நகராட்சி கமிஷனர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, ஸ்ரீதர் கூறுகையில், ''நகராட்சிக்கு சொந்தமான எம்.ஜி.மார்க்கெட்டில் 1,475 கடைகள் உள்ளன. இதில் பல கடைகளுக்கு வாடகை செலுத்த வில்லை.

எனவே நகராட்சிக்கு வாடகை தொகையை, 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தவறினால் கடைக்கு சீல் வைக்கப்படும்,'' என்றார்.

இதனைத் தொடர்ந்து நகராட்சி மேலாளர் ஜெயராம் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் எம்.ஜி. மார்க்கெட்டின் கடைகளுக்கு சென்று வாடகை கட்டணத்தை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கடைகளுக்கு வாடகை எதுவும் உயர்த்தப்படவில்லை. ஆயினும் நிலுவைத் தொகை 20,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை கூட சிலர் பாக்கி வைத்துள்ளனர்.

எனவே, நிலுவைத் தொகையை விரைந்து செலுத்த வேண்டும். செலுத்தாமல் அலட்சியம் காட்டினால் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்தனர்.

'ஆண்டர்சன் பேட்டையில் கூட நகராட்சி கடைகள் உள்ளன. அங்கும் பல கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் உள்ளனர். இதன் பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us