தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போதை தடுப்பு படையை வலுப்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு

 போதை தடுப்பு படையை வலுப்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு

 போதை தடுப்பு படையை வலுப்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு


ADDED : மார் 07, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உள்துறை

 கர்நாடக போலீஸ் துறையில் கடந்த, 3 ஆண்டுகளில் 5,911 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு, 8,000 பணியிடங்கள் நிரப்பப்படும்

 போலீஸ் துறையில் ஆள்சேர்ப்பில் வெளிப்படைதன்மையை கடைப்பிடிக்கும் வகையில், 'போலீஸ் மற்றும் போலீஸ் துணை சேவை ஆணையம்' துவக்கப்படும்

 போலீஸ் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஐந்து கட்டங்களாக 4,914 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. வரும் நிதியாண்டில், 250 கோடி ரூபாய் செலவில் புதிதாக குடியிருப்புகள் கட்டும் பணி துவங்கும்

 பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 1,000 போலீசார் தங்கும் வகையில், நிரந்தர கூடாரம் கட்டப்படும். இதற்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

 தட்சிண கன்னடாவின் மானி, சஜிப்பநாடு, பெலகாவியின் யரகட்டி, யாத்கிரின் காக்கேரா, தாவணகெரேயின் அனகோடு, ஹாவேரியின் துலுவள்ளி, மைசூரின் உதயகிரி தெற்கு, விஜயபுராவில் முத்தேபிஹால் ரூரல், கோலாரின் நரசாபூரில் சட்டம் - ஒழுங்கு போலீஸ் நிலையங்களும், பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர், சித்ரதுர்காவின் ஹரியுர், சாம்ராஜ்நகரின் குண்டலுபேட்டில் போக்குவரத்து போலீஸ் நிலையங்களும் புதிதாக திறக்கப்படும்

 போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட, 75 கோடி ரூபாய் செலவில் புதிய வாகனங்கள் வாங்கப்படும்

 மத்திய, மாநில அரசுகள் பங்களிப்பில், 354 கோடி ரூபாயில் தகவல் தொடர்பு உபகரணங்கள், தடய ஆய்வக மைய உபகரணங்கள், கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கப்படும். இதில், மாநில அரசின் பங்களிப்பு 142 கோடி ரூபாய்

 போதை பொருள் தடுப்பு படையை வலுப்படுத்த, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். கர்நாடகாவை போதை பயன்பாடு இல்லா மாநிலமாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள்

 வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்தவும், வகுப்புவாத கலவரங்களை தடுக்கவும், மாநிலத்தில் சிறப்பு பணி செயல்படுத்தப்பட்டு உள்ளது. உடுப்பி, தட்சிண கன்னடா, ஷிவமொக்காவில் தற்போது பணி குழு இயங்கி வருகிறது

 பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை நிர்வகிக்கும் நோக்கில், போக்குவரத்து மேலாண்மை நிறுவனங்களால் நிர்வகிகப்படும் தரவுகளை சேகரித்து வைக்க 25 கோடி ரூபாய் செலவில் 'டிஜிட்டல் தளம்' உருவாக்கப்படும்

 தீயணைப்பு துறைக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 தீயணைப்பு துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவுப்படி, 150 ரூபாயில் இருந்து, 300 ரூபாயாக உயர்த்தப்படும்

 சிறைகளில் கஞ்சா, மொபைல் போன்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்புக்காக 20 கோடி ரூபாய் செலவில் உபகரணங்கள் வாங்கப்படும்

 பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் போதை பொருள் ஒழிப்பு மையம் நிறுவப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us