/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிறிஸ்துவ மாணவர்களுக்கு ரூ.100 கோடி நிதியுதவி
/
கிறிஸ்துவ மாணவர்களுக்கு ரூ.100 கோடி நிதியுதவி
ADDED : மே 14, 2025 11:10 PM
தங்கவயல்:“கிறிஸ்துவர்கள் நல மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் கல்விக்கு 100 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. இதை கிறிஸ்துவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என, இதன் துணைத் தலைவர் சஞ்சய் ஜாகிர்தர் வலியுறுத்தினார்.
கோரமண்டலில் உள்ள இம்மானுவேல் தேவாலயத்தில் கர்நாடக மாநில கிறிஸ்தவர் நல மேம்பாட்டு கார்ப்பரேஷனின் துணைத் தலைவர் சஞ்சய் ஜாகிர் தர், கோலார் மாவட்ட சிறுபான்மையினர் நல வாரிய அதிகாரி ஷரீன் தாஜ் ஆகியோர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.
சஞ்சய் ஜாகிர் தார் பேசியது:
கிறிஸ்துவர்கள், கிறிஸ்துவ சமுதாய மேம்பாட்டில் பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை.
கர்நாடக மாநில அரசு சிறுபான்மையினரான கிறிஸ்துவ சமுதாய நலனுக்கு 250 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது. இதில் 100 கோடி ரூபாய் கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்வியில் வளர்ச்சி அடைந்தால், அனைத்திலும் முன்னேற்றம் காணமுடியும். அரசு வழங்கும் சலுகைகளை பெற வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட அதிகாரி ஷெரீன் தாஜ் கூறுகையில், “மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்விக்கு அரசு நிதியுதவி செய்கிறது. சிறுபான்மையினர் நலத்துறையில் 80 சதவீதம் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. இது கடனுதவி திட்டம். முழுமையாக படித்து முடித்த ஆறு மாதங்களுக்கு பின்னர், வாங்கிய கடனை செலுத்தலாம். அதுவரை யாரும் எந்த தொந்தரவும் செய்ய மாட்டார்கள்,” என்றார்.
போதகர்கள் ஏ.வில்லியம் கதிர், சத்தியமூர்த்தி, உதயகுமார், செல்வின், அமலநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.