/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு குடிநீர் வாரியத்திற்கு ரூ.103 கோடி ஊக்கத்தொகை
/
பெங்களூரு குடிநீர் வாரியத்திற்கு ரூ.103 கோடி ஊக்கத்தொகை
பெங்களூரு குடிநீர் வாரியத்திற்கு ரூ.103 கோடி ஊக்கத்தொகை
பெங்களூரு குடிநீர் வாரியத்திற்கு ரூ.103 கோடி ஊக்கத்தொகை
ADDED : மார் 15, 2025 11:34 PM
பெங்களூரு: பெங்களூரு குடிநீர் வாரியத்தை பாராட்டி, மத்திய அரசு 103 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளிக்க அனுமதி வழங்கி உள்ளது.
பெங்களூரில் 30க்கும் மேற்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம், தினமும் 1,450 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த நீர் பெங்களூரு, பிற மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
சமீபத்தில், மத்திய அரசின் 'ஜல் ஹி அம்ரித் யோஜனா' திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் ஆய்வு நடந்தது.
இதில், பெங்களூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 23 மையங்களுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீடு வழங்கியது. இதன் காரணமாக, பெங்களூரு குடிநீர் வாரியத்திற்கு ஊக்கத்தொகையாக 103 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது.
ஏற்கனவே, பெங்களூரு குடிநீர் வாரியம் சுத்தமான, தரமான குடிநீரை வழங்குகிறது என பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிலை பணியகத்தின் சான்றிதழ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், குடிநீர் வாரியம் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது.
இது குறித்து, பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறுகையில், ''பெங்களூரு குடிநீர் வாரியம் கழிவுநீரை சுத்திகரிப்பதில் உலக அளவிலான தரத்தை பெற்றுள்ளது.
தரமான குடிநீரை சுத்திகரிப்பதில் ஆசிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது. ஊக்கத்தொகையை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சீர் செய்வதற்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம்,'' என்றார்.