UPDATED : நவ 26, 2026 12:00 AM
ADDED : நவ 25, 2026 07:22 PM
பெங்களூரு: டில்லியில் சட்ட விரோதமாக போதை பொருளை கடத்தி வந்து, பெங்களூரில் விற்பனை செய்த ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 11 கோடி ரூபாய் மதிப்பிலான 5.72 கிலோ போதை பொருட்கள் மீட்கப்பட்டன.
பெங்களூரு நகர தலைமை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
எலஹங்கா நியூடவுன் போலீஸ், பாரதிநகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 22ம் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, தடை செய்யப்பட்ட போதை பொருள் வைத்திருந்த இம்ரான் பாஷா, 28, ஆயிஷா சித்திக், 27, உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 11.74 கோடி ரூபாய் மதிப்பிலான 5.870 கிலோ போ தை பொருள் பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் விசாரணை நடத்திய போது, டில்லியில் இருந்து போதை பொருளை கடத்தி வந்து, பெங்களூரில் பொதுமக்களுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கும் அதிக விலைக்கு விற்றதாக தெரிவித்து உள்ளனர்.
