தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மாரடைப்பு மரணத்தை தடுக்க மாநிலம் தழுவிய திட்டம் 3 மாதத்தில் கீமோதெரபி பராமரிப்பு மையம் துவக்கம்

மாரடைப்பு மரணத்தை தடுக்க மாநிலம் தழுவிய திட்டம் 3 மாதத்தில் கீமோதெரபி பராமரிப்பு மையம் துவக்கம்

மாரடைப்பு மரணத்தை தடுக்க மாநிலம் தழுவிய திட்டம் 3 மாதத்தில் கீமோதெரபி பராமரிப்பு மையம் துவக்கம்


UPDATED : நவ 25, 2026 12:02 AM

ADDED : நவ 25, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:02 AM ADDED : நவ 25, 2026 12:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தட்சிண கன்னடா: ‘‘திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணத்தை தடுக்க செயல்படுத்தப்பட்ட, ‘டாக்டர் புனித் ராஜ்குமார் இதய ஜோதி’ திட்டம், மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், கீமோதெரபி சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள கித்வாய் மருத்துவமனையில் குவிவதை தடுக்க, அடுத்த மூன்று மாதங்களுக்குள், மாநிலம் முழுதும் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், கீமோதெரபி பகல் நேர பராமரிப்பு மையங்கள் துவங்கப்படும்,’’ என, சுகாதார துறை அமைச்சர் காதர் தெரிவித்தார்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணத்தை தடுக்க, 80 மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்ட, டாக்டர் புனித் ராஜ்குமார் இதய ஜோதி திட்டம், மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்.

கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், இதய வலி அல்லது இதயம் தொடர்பான பாதிப்பு அறிகுறிகளை உணர்ந்தவுடன், அருகில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு சென்றால், அவர்களுக்கு இலவசமாக, இ.சி.ஜி., பரிசோதனை செய்யப்படும்.

இந்த பரிசோதனையில் வேறுபாடுகள் தென்பட்டால், உடனடியாக விலை உயர்ந்த, உயிர்காக்கும் ஊசி இலவசமாக போடப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கோ அல்லது பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைக்கோ அனுப்பி வைக்கப்படுவர்.

அங்கு அவர்களுக்கு இலவசமாக ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படும்.

இதுவரை மாநிலத்தில் 14,94,578 பேருக்கு இ.சி.ஜி., பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 22,579 பேருக்கு மாரடைப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டு, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

தற்போது பி.பி.எல்., அட்டைதாரர்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த வசதியை வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப் படுகிறது.

கீமோதெரபி மையங்கள்



புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், கீமோ தெரபி சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள கித் வாய் மருத்துவமனையில் குவிவதை தடுக்க, அடுத்த மூன்று மாதங்களுக்குள், மாநிலம் முழுதும் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், கீமோ தெரபி பகல்நேர பராமரிப்பு மையங்கள் துவங்கப்படும்.

அடுத்த கட்டமாக இதை தாலுகா மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்காக, அனைத்து மாவட்டங்களுக்கும் தலா 30 லட்சம் ரூபாய் செலவில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பரிசோதனை இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மார்பக புற்றுநோய் அறிகுறி உள்ளோர், இந்த கருவிகள் மூலம் இலவச பரிசோதனையும், சிகிச்சையும் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us