/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2030ல் சுரங்க சாலை தயாராகும் கி.மீ.,க்கு ரூ.19 கட்ட வேண்டும்
/
2030ல் சுரங்க சாலை தயாராகும் கி.மீ.,க்கு ரூ.19 கட்ட வேண்டும்
2030ல் சுரங்க சாலை தயாராகும் கி.மீ.,க்கு ரூ.19 கட்ட வேண்டும்
2030ல் சுரங்க சாலை தயாராகும் கி.மீ.,க்கு ரூ.19 கட்ட வேண்டும்
ADDED : ஜூலை 02, 2025 11:10 PM
பெங்களூரு: பெங்களூரில் 2030ல் ஹெப்பால் - சில்க் போர்டு இடையிலான சுரங்கப்பாதையில் மக்கள் பயணம் செய்யலாம். ஆனால், இந்த சாலையில் பயணம் செய்ய கி.மீ.,க்கு 19 ரூபாய் செலுத்தும் வகையில் கட்டணச் சாலையாக அமைக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, மேம்பாலம் கட்டுவது, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. ஆனாலும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கவில்லை.
பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்வர் சிவகுமார், சுரங்க சாலை அமைக்க திட்டம் வகுத்துள்ளார். இதற்காக 18,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
'இத்திட்டம் விவேகமானது அல்ல. ஹைஸ்பீடு இயந்திரங்கள் பயன்படுத்தினால், பூமி தளர்வடையும். வரும் காலத்தில் பெங்களூரின் பெரிய, பெரிய கட்டடங்களுக்கு அபாயம் ஏற்படும்' என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதை பொருட்படுத்தாமல், திட்டத்தை செயல்படுத்துவதில் சிவகுமார் ஆர்வம் காட்டுகிறார். திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கைக்கு நிதித்துறையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
திட்டத்தை மேற்பார்வையிட்டு, செயல்படுத்த, 'பி - ஸ்மைல்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நிதித்துறையின் அனுமதி கிடைத்த பின், டெண்டர் அழைத்து, பணிகள் துவக்கப்பட உள்ளன.
இது குறித்து, தொழிற்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஹெப்பால் - சில்க் போர்டு இடையில், சுரங்க சாலைகள் அமைக்கப்படும். பணிகள் முடிவடைந்தால் பயண நேரம் பாதியாக குறையும். ஆனால் இந்த சாலையில் பயணம் செய்ய, கி.மீ.,க்கு 19 ரூபாய் செலுத்த வேண்டும்.
சுரங்கப்பாதை 16.69 கி.மீ., தொலைவிலானது. மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் பயணம் செய்யும் வகையில், சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. அதற்காக 80 கி.மீ., வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
பெண்கள், மூத்த குடிமக்கள், இளைஞர்கள் என, பலரும் ஒவ்வொரு விதமான வேகத்தில் வாகனம் ஓட்டுவர். ஒரே வேகத்தில் செல்ல இது, தேசிய நெடுஞ்சாலை அல்ல. தற்போது ஹெப்பாலில் இருந்து, சில்க் போர்டு வரையிலான சராசரியாக மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் செல்கின்றன.
இதே வேகத்தில் சென்றால், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல 90 நிமிடங்கள் ஆகும். சுரங்க சாலை அமைந்தால், இந்த நேரம் 45 நிமிடங்களாக குறையும். 2030ல் சுரங்க சாலை தயாராகும். இதில் பயணம் செய்ய, கி.மீ.,க்கு 19 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.