தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வெளிமாநிலத்தில் பதிவு செய்து இயக்கப்பட்ட வாகனங்களுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிப்பு

 வெளிமாநிலத்தில் பதிவு செய்து இயக்கப்பட்ட வாகனங்களுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிப்பு

 வெளிமாநிலத்தில் பதிவு செய்து இயக்கப்பட்ட வாகனங்களுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிப்பு


ADDED : ஏப் 10, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கலபுரகி: வெளிமாநிலத்தில் பதிவு செய்து, கலபுரகியில் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு, போக்குவரத்து துறை இரண்டு கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

கர்நாடகாவில் நான்கு சக்கர வாகனங்கள் மீதான சாலை வரி, 13 சதவீதம் முதல், 20 சதவீதம் வரை உள்ளது. ஆனால், புதுச்சேரி போன்ற மத்திய ஆட்சி பகுதிகளில், இந்த வரி மிகவும் குறைவாக உள்ளது.

எனவே லட்சக்கணக்கான ரூபாய் வரியை மிச்சப்படுத்தும் நோக்கில், பெரும்பாலான சொகுசு கார்களின் உரிமையாளர்கள், தங்களின் கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து, கர்நாடகாவில் பயன்படுத்துகின்றனர்.

இதன்விளைவாக, மாநில கருவூலத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கர்நாடக மோட்டார் வாகன சட்டப்படி, வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை, கர்நாடகாவில் அதிகபட்சம், 11 முதல் 12 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது.

ஒருவேளை அதிக நாட்கள் இங்கேயே பயன்படுத்தினால், கர்நாடக மாநில விதி முறைப்படி, சாலை வரி செலுத்துவது கட்டாயம்.

வரி ஏய்ப்பு செய்யும் வாகன உரிமையாளர்கள் மீதான நடவடிக்கையை, போக்குவரத்து துறை தீவிரப்படுத்தியுள்ளது.

கலபுரகி மாவட்டத்தில், சட்டவிரோதமாக இயக்கப்பட்ட வெளிமாநிலங்களில் பதிவான, 92 வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றின் உரிமையாளர்களுக்கு, 1.98 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர்.

இத்தகைய வாகனங்களை தொடர்ந்து இயக்கினால், பறிமுதல் செய்வதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us