/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கம்பாலா போட்டி நடத்த ரூ.2 கோடி நிதி தேவை
/
கம்பாலா போட்டி நடத்த ரூ.2 கோடி நிதி தேவை
ADDED : அக் 12, 2025 03:53 AM
மங்களூரு: கம்பாலா போட்டி நடத்த, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நேற்று மங்களூரில் கர்நாடக மாநில கம்பாலா அசோசியேஷன் தலைவர் தேவிபிரசாத் ஷெட்டி கூறியதாவது:
கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலாவுக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு, முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டுள்ளேன்.
விளையாட்டின்போது, விதிகளை மீறுவது, விலங்குகளை கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர். கம்பாலா விளையாட்டு போட்டிக்கு நிதியுதவி செய்ய 'ஸ்பான் சர்களை' தேடி வருகிறோம்.
நவம்பர் 15ம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் கம்பாலா நடக்க உள்ளது. மொத்தம் 25 போட்டிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.