பெங்., விமான நிலையத்தில் ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்
பெங்., விமான நிலையத்தில் ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்
ADDED : ஜூன் 22, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், ஹைட்ரோ கஞ்சா கடத்தி வருவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
பயணியரை கண்காணித்த போது, ஒருவர் மேல் சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்து,சோதனைக்கு உட்படுத்திய போது, உடைமைகளுக்குள் மறைத்து, 5 கிலோ 98 கிராம் எடையுள்ள ஹைட்ரோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள், அதை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, சந்தையில் 2.09 கோடி ரூபாய். போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கபட்டார்.
