/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐஸ்வர்யா கவுடாவிடம் ரூ.2.25 கோடி பறிமுதல்
/
ஐஸ்வர்யா கவுடாவிடம் ரூ.2.25 கோடி பறிமுதல்
ADDED : ஏப் 27, 2025 05:42 AM

பெங்களூரு : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட, ஐஸ்வர்யா கவுடாவிடம் இருந்து 2.25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக, அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு, ஆர்.ஆர்., நகரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா, 33. காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்று கூறி, சில நகைக்கடைகளில் இருந்து நகை வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்தார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஜாமினில் உள்ளார்.
ஐஸ்வர்யாவின் வங்கிக்கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மூன்று மாதங்களில் 50 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்தது தெரிந்தது. அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டது தெரிந்தது.
கடந்த 24ம் தேதி ஐஸ்வர்யா, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின், ஐஸ்வர்யாவை விசாரணைக்கு அழைத்துச் சென்று, அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
நேற்று அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், 'சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஐஸ்வர்யா கவுடாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் இருந்து 2.25 கோடி ரூபாய் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்றி உள்ளோம்' என கூறப்பட்டுள்ளது.

