/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ. 2.27 கோடி காணிக்கை வசூல்
/
மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ. 2.27 கோடி காணிக்கை வசூல்
மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ. 2.27 கோடி காணிக்கை வசூல்
மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ. 2.27 கோடி காணிக்கை வசூல்
ADDED : அக் 18, 2025 04:44 AM

சாம்ராஜ்நகர்: பிரசித்தி பெற்ற மலை மஹாதேஸ்வரா மலை கோவில் உண்டியலில், 28 நாட்களில் 2.27 கோடி ரூபாய் காணிக்கை வசூலானது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில், மலை மஹாதேஸ்வர மலை உள்ளது. இங்குள்ள மஹாதேஸ்வரர் கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. உண்டியலில் 2.27 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வசூலானது. 46 கிராம் தங்கம், 1.350 கிலோ வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வந்திருந்தன.
ஒன்பது வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இல்லாத, 2,0 00 ரூபாய் மதிப்புள்ள ஒன்பது நோட்டுகள் உண்டியலில் போடப்பட்டிருந்தன.
இதேபோல், கொப்பால் நகரின், ஹுலகி கிராமத்தில் உள்ள ஹுலிகெம்மா கோவிலும், 43 நாட்களுக்கு பின், நேற்று முன்தினம் உண்டியல் எண்ணப்பட்டது.
உண்டியலில் 95.03 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகியிருந்தது. இதை தவிர 60 கிராம் தங்கம், ஏழு கிலோ வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வந்திருந்தன.