sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.31 லட்சம் கொள்ளை

/

 தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.31 லட்சம் கொள்ளை

 தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.31 லட்சம் கொள்ளை

 தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.31 லட்சம் கொள்ளை


ADDED : பிப் 03, 2026 06:07 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பன்னரகட்டா: பெங்களூரில் பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 31 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற, நான்கு பேரை போலீஸ் தேடுகிறது.

பெங்களூரு பன்னரகட்டாவில் உள்ள உதான் என்ற தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்பவர் கைலாஷ், 30. இவருக்கு, நிறுவனத்தின் மற்ற கிளைகளில் இருந்து பணத்தை வசூலிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் மாலை மூன்று கிளை நிறுவனங்களில் இருந்து 31.38 லட்சம் ரூபாயை வசூலித்தார். பணத்தை ஸ்கூட்டர் டிக்கியில் வைத்து, அலுவலகத்திற்கு சென்றார். சக்வாரா என்ற இடத்தில் சென்ற போது, இரண்டு பைக்குளில் வந்த நான்கு பேர், கைலாஷ் ஓட்டி சென்ற ஸ்கூட்டரை மறித்தனர்.

கைலாஷை தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டினர். அவரது ஸ்கூட்டருடன் அங்கிருந்து தப்பினர். ஒரு கி.மீ., துாரம் சென்றதும், ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு டிக்கியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.

இதுகுறித்து கைலாஷ் அளித்த புகாரில், பன்னர்கட்டா போலீசார் 4 பேரையும் தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான காட்சிகள், ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us