sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ரூ.3.50 கோடி போதை பறிமுதல்; இன்ஜினியர் உட்பட 2 பேர் கைது

/

 ரூ.3.50 கோடி போதை பறிமுதல்; இன்ஜினியர் உட்பட 2 பேர் கைது

 ரூ.3.50 கோடி போதை பறிமுதல்; இன்ஜினியர் உட்பட 2 பேர் கைது

 ரூ.3.50 கோடி போதை பறிமுதல்; இன்ஜினியர் உட்பட 2 பேர் கைது


ADDED : ஜன 07, 2026 05:17 AM

Google News

ADDED : ஜன 07, 2026 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசோக்நகர்: பெங்களூரில், 3.50 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு ஓசூர் சாலையில், இறந்த ஹிந்துக்கள் உடல்களை அடக்கம் செய்யும் மயானம் அருகே, போதை பொருள் விற்பனை நடப்பதாக, அசோக்நகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது.

அங்கு சென்ற போலீசார், போதைப்பொருளை விற்ற ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், சிக்க பானஸ்வாடியை சேர்ந்த, சாப்ட்வேர் இன்ஜினியர் தாரிக் இக்பால், 33, என்பது தெரிந்தது.

அவர் கொடுத்த தகவலின்படி, அவரது நண்பரான பையப்பனஹள்ளியில் வசிக்கும், முகமது அப்ராஜ், 29, என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இருவரிடம் இருந்து, 3.2 கிலோ மெத் ஆம் பெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு, 3.50 கோடி ரூபாய். கைதான இருவர் மீதும், போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us