தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ரூ.22,400 கோடி!  மாநிலத்தின் வறட்சி பாதிப்புக்கு தேவை...  மத்திய அரசுக்கு துணை முதல்வர் கடிதம்

ரூ.22,400 கோடி!  மாநிலத்தின் வறட்சி பாதிப்புக்கு தேவை...  மத்திய அரசுக்கு துணை முதல்வர் கடிதம்

ரூ.22,400 கோடி!  மாநிலத்தின் வறட்சி பாதிப்புக்கு தேவை...  மத்திய அரசுக்கு துணை முதல்வர் கடிதம்


UPDATED : நவ 04, 2026 03:44 AM

ADDED : நவ 03, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 03:44 AM ADDED : நவ 03, 2026 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு தனித்தனியாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

கர்நாடகாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 226 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளன. 1.47 கோடி ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதன் மூலம் 62.48 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும், லட்சக்கணக்கான விவசாய குடும்பங்களை, நிதி நெருக்கடிக்கு தள்ளி உள்ளது. குறிப்பாக, சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

ரூ.22,400 கோடி



நடப்பு 2026 முதல், 2031 வரையிலான காலகட்டத்துக்கு, மாநில பேரிடர் மீட்பு நிதி மற்றும் தேசிய பேரிடர் மீட்பு நிதியில், மத்திய உள்துறை அமைச்சகம், நிவாரணம் வழங்கும் விதிமுறையில் திருத்தம் செய்துள்ளது.

திருத்தப்பட்ட விதிமுறைகள்படி, கர்நாடகாவின் பயிர் சேதத்துக்கான மானிய தொகை 6,128 கோடி ரூபாயில் இருந்து 7,943 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதனால் கூடுதலாக, 1,814 கோடி ரூபாய் உதவி தேவைப்படுகிறது.

இதன் விளைவால், மாநிலத்தின் மொத்த வறட்சி நிவாரண தேவை 20 ஆயிரத்து, 585.73 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 22 ஆயிரத்து, 400.58 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

அதே வேளையில், முந்தைய மனுவில் உள்ள மற்ற அனைத்து விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை.

விவசாய அளவு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. வானிலையிலும் மாற்றத்தால் பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த சூழல், விவசாயிகள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியுடன் ஒப்பிடும்போது, இழப்பீட்டு தொகையின் உயர்வு போதுமானதாக இல்லை.

திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி,மழையை நம்பி உள்ள மானாவாரி் பயிர்களுக்கு, ஏக்கருக்கு 11 ஆயிரம் ரூபாய்; ஆழ்துளை, கிணறுகளை நம்பி உள்ள பாசனப் பயிர்களுக்கு ஏக்கருக்கு 22 ஆயிரம் ரூபாய், ஆண்டுதோறும் பலன் தரும் பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், விதைகள், உரங்கள், விவசாய தொழிலாளர்களின் கூலி, பாசனம், மற்ற அத்தியாவசிய விவசாய உபகரணங்களுக்காக, விவசாயிகள் செய்யும் செலவுகளுடன் ஒப்பிடும்போது, இந்த இழப்பீடு குறைவாக உள்ளது.

இழப்பீடு அளவுகோல்

நடப்பாண்டு, விவசாயத்துக்கான செலவு, பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இழப்பீட்டுக்கான அளவுகோல் அமைய வேண்டும். பயிர் சாகுபடியில் விவசாயிகள் செய்த உண்மையான செலவுகளையும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு நீதி வழங்க முடியாது.

பேரிடர் நிவாரணம் என்பது பெயரளவிலான உதவியுடன் நின்று விடக்கூடாது. விவசாயிகள் பயிர் இழப்புகளில் இருந்து மீண்டு, நம்பிக்கையுடன் மீண்டும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வகையில், நிதியுதவி இருக்க வேண்டும்.

வறட்சி நிவாரணத்துக்கு தகுதியான விவசாயிகளை அடையாளம் காண, 2015 - 16ல் வேளாண் கணக்கெடுப்பின் தரவுகள் இன்னமும் பயன்படுத்துவது சரியல்ல. 10 ஆண்டுகளுக்கு முந்தைய வேளாண் கணக்கெடுப்பு தரவுகள், இன்றைய விவசாயிகளின் நில உடைமை, விவசாய நிலையை துல்லியமாக பிரதிபலிக்கவில்லை.

இதன் மூலம், இழப்பீடு பெறத் தகுதியான சிறு, குறு விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். இந்த சூழலில், கர்நாடக அரசின் புரூட்ஸ் தரவுகளை பயன்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும்.

'புரூட்ஸ்' செயலி



இந்த சூழலில், கர்நாடக அரசின் 'புரூட்ஸ்' எனும் விவசாயிகள் பதிவு மற்றும் ஒருங்கிணைந்த பயனாளர் தகவல் அமைப்பின் தரவுகளை பயன்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும். அதில் விவசாயிகளின் சமீபத்திய மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் அடங்கி உள்ளன. இதன் மூலம் தகுதியான பயனாளிகளை அடையாளம் காண வசதியாக இருக்கும்.

தற்போதைய பேரிடர் நிவாரண திட்டம் முழுமையாக மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். விவசாயிகளின் உண்மையான விவசாய செலவு, சமீபத்திய நில உரிமை பதிவுகள், விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பு, வானிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் இழப்புகள் ஆகியவற்றைக் கருதி, இழப்பீட்டுக்கான அளவுகோல்கள் வகுக்கப்பட வேண்டும்.

ஒருமுறை பருவமழை பொய்த்து போவதால், விவசாயிகளின் பல ஆண்டுகால கடின உழைப்பு வீணாகி, குடும்ப சேமிப்பு அனைத்தும் கரைந்து, ஒரு தலைமுறை விவசாயிகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டால், வளர்ந்த இந்தியாவை கட்டி எழுப்ப முடியாது.

எனவே, திருத்தப்பட்ட வறட்சி நிவாரண கோரிக்கையான, 22 ஆயிரத்து, 400 கோடி ரூபாயை வழங்க, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மாநில அரசு சமர்ப்பித்த திருத்தப்பட்ட கோரிக்கையை விரைவாக சரிபார்த்து விரைவில் நிவாரண தொகையை விடுவிக்க வேண்டும்.

விவசாயிகளின் நலனுக்கு அரசியல், நிர்வாக வேறுபாடுகள் தடையாக இருக்கக்கூடாது. கூட்டாட்சி அமைப்பின் கொள்கைகளுக்கு ஏற்ப, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கர்நாடகா எதிர்கொள்ளும் வறட்சி நிலைமை மிகவும் தீவிரமடைந்து உள்ளது. இக்கடிதத்துக்கு மத்திய அரசு மனிதாபிமான கண்ணோட்டத்தில் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us