பின்தங்கிய தாலுகாக்களின் மேம்பாட்டுக்காக ரூ.4,291 கோடி
பின்தங்கிய தாலுகாக்களின் மேம்பாட்டுக்காக ரூ.4,291 கோடி
ADDED : மார் 07, 2026 06:25 AM
திட்டங்கள்
மாநில மேம்பாடு மற்றும் மண்டல ஏற்றத்தாழ்வுகளை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க பேராசிரியர் கோவிந்தராவ் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டியும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.
பொருளாதாரம், சமூகம், அடிப்படை வசதிகள் பற்றாக்குறை அடிப்படையில், கர்நாடகாவின் தாலுகாக்கள், நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. தலா 59 தாலுகாக்கள் பின் தங்கிய, மிகவும் தங்கிய, ஓரளவு வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ந்த தாலுகாக்களாக, கமிட்டி அடையாளம் கண்டுள்ளது.
பின் தங்கிய தாலுகாக்களின் மேம்பாட்டுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசு திட்டம் வகுத்துள்ளது. அடிப்படை வசதிகளை மேம்படுத்த, பொருளாதார வளர்ச்சிக்கு, ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க, நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், நகர வளர்ச்சி, சாலை இணைப்பு உட்பட, பல்வேறு திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்படும். கமிட்டியின் சிபாரிசுகள் கட்டம், கட்டமாக செயல்படுத்தப்படும். இதற்காக பட்ஜெட்டில், 4,291 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில கொள்கை மற்றும் திட்ட ஆணையம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், வானிலை மாற்றம், விவசாயம், மகளிர், குழந்தைகள் நலம் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. அறிக்கையை பரிசீலித்து திட்டங்கள் வகுக்கப்படும்.
கல்யாண கர்நாடகா மேம்பாட்டுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் 13,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. நடப்பாண்டு 5,000 கோடி ரூபாய் செலவிடப்படும்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், கைகளால் எழுதி தரப்படும் ஆவணங்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றப்படும். இதற்காக 10 கோடி ரூபாய் செலவிடப்படும்.
மாவட்ட அளவில் இருந்து, திட்டங்களை தயாரிக்க 26 மாவட்டங்களில், மாவட்ட திட்ட கமிட்டிகள் அமைக்கப்படும்.
கே.கே.ஆர்.டி.பி., நிதியுதவியில் ஜேவர்கியில், 'நாலெட்ஜ் பார்க்' அமைக்கப்படும்.
