/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாகனத்தில் வைத்த ரூ.5 லட்சம் 'அபேஸ்'
/
வாகனத்தில் வைத்த ரூ.5 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூன் 02, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல் : ராபர்ட்சன்பேட்டை வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்த சையத் இப்ரான் என்பவர், 5 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு அதனை இரு சக்கர வாகனத்தின் 'டிக்கி' யில் வைத்துக் கொண்டு சென்றார்.
ராபர்ட்சன்பேட்டை சுராஜ்மல் சதுக்கத்தில் இருந்து ராபர்ட்சன் பேட்டை 4 வது பிளாக் பகுதிக்கு சென்றார். வாகனத்தை நிறுத்திவிட்டு, ஒரு கடையின் உள்ளே சென்றுள்ளார்.
கடையில் இருந்து திரும்பி வந்து வாகனத்தை பார்த்தபோது டிக்கி திறந்து கிடந்தது. அதில் இருந்த 5 லட்சம் ரூபாயை காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த இப்ரான், ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.