தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நில உரிமையாளர்களுக்கு வழங்க ரூ.50 கோடி 

 நில உரிமையாளர்களுக்கு வழங்க ரூ.50 கோடி 

 நில உரிமையாளர்களுக்கு வழங்க ரூ.50 கோடி 


ADDED : மார் 28, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நகர திட்டமிடல்  உள்கட்டமைப்பு திட்டங்களை சீராக செயல்படுத்த, தேவையான நிலம் கையகப்படுத்தப்படும். சி.வி.ராமன் நகர் தொகுதி கதிரியனபாளையாவில் கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 கட்டட திட்ட மீறல் அபராதம், நில வாடகை, ஒற்றை தள தளவமைப்பு திட்ட ஒப்புதல் கட்டணங்களை சேர்த்து, 2026 - 2027 ல் 209.75 கோடி வருவாய் எதிர்பார்க்கிறோம்.

 நகரின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், கெம்பேகவுடாவின் தொலைநோக்கு பார்வையை பின்பற்றி, புதிய திட்டம் உருவாக்கப்படும்.

 சாம்ராஜ்பேட்டின் பாதராயனபுரா பிரதான சாலை 9 மீட்டரில் இருந்து 24 மீட்டராக அகலப்படுத்தப்படும்.

 அரசு உத்தரவுப்படி 1,200 சதுர அடி கட்டடங்களின் உரிமையாளர்கள், குடியிருப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டாய தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

 உயர்வான கட்டடங்கள் முன்பாக செல்லும் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க, தரைத்தள வாகன நிறுத்த விதியில் மாற்றம் செய்து உள்ளோம். இது போக்குவரத்து சீராக செல்ல வழிவகுக்கும்.

 4,000 சதுர அடியில் வீடு, கட்டடம் கட்ட தனியார் கட்டட கலைஞர்கள், இன்ஜினியர்களிடம் இருந்து தற்காலிக அனுமதி வாங்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us