தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எஸ்.எஸ்.எல்.சி.,யில் முதலிடம் பிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு

 எஸ்.எஸ்.எல்.சி.,யில் முதலிடம் பிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு

 எஸ்.எஸ்.எல்.சி.,யில் முதலிடம் பிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு


ADDED : ஆக 31, 2026 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு, மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்' என, மாநில பள்ளி கல்வி எழுத்தறிவு துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மாநில அரசின், 'தர உறுதி, மாணவர் ஊக்கம் முன்னெடுப்பு' திட்டத்தின் கீழ், அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு, மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ஆண்டுக்கு, 3.25 கோடி ரூபாய் மானியம் பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தும் பொறுப்பு, கர்நாடக பள்ளி தேர்வுகள், மதிப்பீட்டு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us