ADDED : செப் 12, 2026 11:46 PM
பெங்களூரு: தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடம், 5.25 கோடி ரூபாய் மதிப்புள்ள, 15 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை, சுங்கத்துறையின் வான்வழி புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பங்காக்கில் இருந்து பெங்களூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, ஏ.ஐ.யு., எனும் சுங்க துறையின் வான்வழி புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த 10ம் தேதி, இரவு 11:55 மணிக்கு பாங்காக்கில் இருந்து பெங்களூரு கெம்பே கவுடா இரண்டாவது முனையத்தில், தாய் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கியது.
அதில் பயணித்த பயணியர் உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சூரஜ் சூரியவன்ஷி என்பவரின் உடமைகளை சோதனையிட்டனர்.
அவரிடமிருந்து, 5.25 கோடி ரூபாய் மதிப்புள்ள, 15 கிலோ ஹைட்ரோபோனிக் எனும் உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சூரஜ் சூர்யவன்ஷியை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
