தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிரப்ப ரூ.650 கோடி

 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிரப்ப ரூ.650 கோடி

 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிரப்ப ரூ.650 கோடி


ADDED : மார் 07, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறிய நீர்பாசனம் l ஹெச்.என்.,வேலி திட்டத்தின் மூன்றாவது கட்டம் மூலம், சித்லகட்டா தாலுகாவில், 45 குடிநீர் தொட்டிகள், சிந்தாமணி தாலுகாவில், 119 குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்ப 237 கோடி ரூபாயில் திட்டம் நிறைவேற்றப்படும்

l பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் தாலுகா சுலிபெலே, நந்தகுடி எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள, குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படும். இதற்காக 140 கோடி ரூபாய் செலவிடப்படும்

l விரு ஷ்பாவதி திட்டத்தின் கீழ் நெலமங்களா, தொட்டபல்லாபூர் தாலுகாக்களில் உள்ள, 119 குடிநீர் தொட்டிகளுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நிரப்ப 650 கோடி ரூபாய் செலவிடப்படும்

l மடிகேரி -- குஷால்நகர் பகுதிகளில் தடுப்பணை மற்றும் கால்வாய் கட்டுவது; ஷிம்சா ஆற்றின் குறுக்கில் பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டுவது; பெங்களூரு - சித்லகட்டா பகுதிகளில், 164 குடிநீர் தொட்டிகளுக்கு நீரேற்றுவது; கோலார் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்வது; பெங்களூரு ரூரல் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகாவில் பல கிராமங்களில் தடுப்பணை கட்டுவது உட்பட 112 பணிகளுக்காக 1,793 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us